• May 09 2026

நாங்க கல்யாணம் பண்ணாம இருக்கிறதுக்கு காரணம் இதுதான்.! சண்முகபாண்டியன் வெளியிட்ட உண்மை

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயகாந்த் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை உருவாக்கியிருந்தார். இந்நிலையில், விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்திய பேட்டியில் சண்முகபாண்டியன் தனது குடும்ப வாழ்க்கை மற்றும் கல்யாணத்தைப் பற்றிய எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். 

அவர் கூறியதாவது,“நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணமாட்டோம்னு சொல்லல, சூழ்நிலையால தான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கோம். அப்பாக்கு உடம்பு சரியில்லாத போதே அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்னு நினைச்சார். 

நிறைய பொண்ணுங்க பாத்தாங்க. செட் ஆகல... அதுக்கு அப்புறம் அண்ணாவும் அரசியல்ல இறங்கிட்டான். நானும் அம்மாவும் அப்பாவ பார்த்துக்கிட்டோம். அதனால கல்யாணத்தைப் பற்றியே யோசிக்கல.” என்றார். 

இந்த கருத்து, அவரது குடும்ப சூழ்நிலை மற்றும் தனிப்பட்ட முடிவுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement