• Jun 29 2024

நடிகை தமன்னா அழகின் ரகசியம் இது தானாம்-அவரே கூறிய மூன்று விசயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா சந்த் சா ரோஷன் செகரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து 2006-இல் வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்றி கொடுத்தார் நடிகை தமன்னா

தொடர்ந்து முன்னணி நடிகர்களான தல, தளபதி, தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.அத்துடன் நடிகை தமன்னா வெப் சீரிஸ் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் நடிகர் ராதாரவி ஒரு மேடையில் பேசும்போது "தமன்னாவை விமான நிலையத்தில் சந்தித்தேன். அவரை சுற்றி சுற்றி பார்த்தேன். அவ்வளவு வெள்ளையாக இருந்தார்" என பேசினார். அது சர்ச்சையானதும் எல்லோருக்கும் தெரியும்.

இந்நிலையில் தமன்னா தன் அழகின் ரகசியம் பற்றி ட்விட்டரில் கூறி இருக்கிறார். ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன அவர் "Good nutrition, adequate rest மற்றும் a solid skin care routine ஆகியவை தான் அழகின் ரகசியம் என கூறி இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement