• May 12 2024

பூவே உனக்காக சீரியல் திடீரென முடிவடைவதற்கு காரணம் இது தானாம்- கிசுகிசுக்கப்படும் புதிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் கடந்த பல வருடங்களாக சூப்பர் ஹிட்டாக சீரியல்களைத் தொகுத்து வழங்குவதில் சன்டிவி முன்னணியில் காணப்படுகின்றது. அந்த வகையில் இதில் ஹிட்டாக சுந்தரி ,வானத்தைப் போல ,கயல், கண்ணான கண்னே, பூவே உனக்காக ,அருவி போன்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.

சன்டிவி தொடர்களே எப்போதும் டிஆர்பியில் முதலிடத்திலும் இருந்து வருகின்றது. அதிலும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இதில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக தொடர் முடியப் போவதாக சில வாரங்களுக்கு முதலே கூறப்பட்டது.

அந்த வகையில் சீரியலில் கிளைமாக்ஸ் தற்போது ஷூட்டிங் செய்யப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. கடைசி எபிசோடு விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த ரேட்டிங் பெறுவதால் தான் இந்த தொடர் முடிவுக்கு வருகின்றது என சீரியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சீரியல் முடிவடைந்ததும் அந்த நேரத்தில் அருவி சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement