• Apr 01 2023

எஸ்.ஜே.சூர்யா இரண்டு முறை கைது.. காரணம் இதுதானாம்.. திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் படங்களை இயக்கி பிரபல இயக்குநர்களில் ஒருவராக முத்திரை பதித்தவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் தற்போது படங்களை இயக்குவதை விட்டு விட்டு படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்கென்று தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.


அந்தவகையில் வாலி, குஷி இரு சூப்பர்ஹிட் படங்களுக்கு பின் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த திரைப்படம் 'நியூ'. இப்படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கால் பதித்தார். ஏகப்பட்ட அடல்ட் காட்சிகள் நிறைந்திருந்த இப்படத்தை சென்சாரில் பார்த்த பெண் அதிகாரி ஒருவர் இப்படத்திற்கு U சான்றிதழும் இல்லை, U/A சான்றிதழும் இல்லை என்று கூறிவிட்டு, எஸ்.ஜே. சூர்யாவை மிகவும்  தரக் குறைவாக பேசினாராம்.


இதனைக் கேட்டதும் உடனே கோபமடைந்த எஸ்.ஜே. சூர்யா தனது கையில் இருந்து செல் போனை கொஞ்சமும் யோசிக்காது அந்த அதிகாரியின் மீது தூக்கி எறிந்துள்ளார். இதன்பின் எஸ்.ஜே. சூர்யா மீது அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஜே. சூர்யா பின், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து பின்னர் நியூ படத்தில் இடம்பெறும் சிம்ரனுக்கும், எஸ்.ஜே. சூர்யாவிற்குமான நெருக்கமான காட்சிகளின் உடைய போஸ்டர்கள் சென்னையில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இவை தடை செய்யப்பட்ட காட்சிகளின் போஸ்டர் என்பதால் மீண்டும் எஸ்.ஜே. சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீளவும் இவர் கைதாகியுள்ளார். அதன் பின்னரும் ஒருவாறாக ஜாமினில் வெளியே வந்து விட்டார். 


இவ்வாறு ஒரே ஒரு படத்திற்காக இரு முறை கைது செய்யப்பட்டுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இந்த விடயமானது அந்த சமயத்தில் ரசிகர்களிடையேயும், திரையுலகில் பலரிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement