• May 04 2024

சிவராத்திரியில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரபாஸ்.. 'Project K' ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பான் இந்தியா நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் பிரபாஸ். இவரின் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரிக்கு 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தின் டீசர் காட்சியை பார்த்து விட்டு நாடு முழுவதும் கிளம்பிய ட்ரோல்கள் காரணமாக அப்படத்தை மீண்டும் ரீ எடிட் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இதனைத் தொடர்ந்து கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'சலார்' திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இப்படங்களை அடுத்து இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜெக்ட் கே' என்ற படத்தில் அடுத்ததாக பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட்டின் ஹீரோ அமிதாப் பச்சன் மற்றும் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். 


இந்த படமும் பிரம்மாண்ட பொருட்செலவில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தினுடைய ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


அந்தவகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடிகர் பிரபாஸின் 'ப்ராஜெக்ட் கே' திரைப்படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மகாசிவராத்திரியை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் அறிவித்து உள்ளமை பிரபாஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement