• May 04 2024

மாவீரன் படத்தின் கதைக்களம் இது தான்- இதுவரைக்கும் நான் நடிக்காத கதாப்பாத்திரம்- முதன்முறையாக ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஆகஸ்ட் 14, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.‌ அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் மாவீரன் படத்தின் அப்டேட் குறித்து கேள்வி கேட்டனர். 


இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தின் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு  முடிந்து விட்டது.இன்னும் இரண்டு மூன்று நாட்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும்.  அடுத்ததாக எனக்கு மாவீரன் படம் ரிலீஸ் ஆகும். 


மாவீரன் படத்தின் கதைக்களம் புதியது. இதுவரை நான் செய்யாத புதிய கதைக்களம் அது. இந்த கதைக்களத்திற்கு ஏற்ப ஷூட்டிங் செய்ய மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது.  இயக்குநர் மடோன் அஸ்வினிடம் இருந்து நல்ல விஷயங்களை கற்றுள்ளேன்." என சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement