தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதேவேளை, ரசிகர்களை நேரடியாக கவரும் வகையிலான மாஸ் கமர்ஷியல் திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அப்போது பேசிய அவர், இனி முழுக்க முழுக்க ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மாஸ் கமர்ஷியல் திரைப்படங்களில் மட்டுமே நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘SK27’ திரைப்படம் தரமான மாஸ் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ‘SK27’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். படத்தின் தொடக்க சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொடக்கப் பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு, அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாஸ் கமர்ஷியல் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கப் போவதாக அவர் கூறியிருப்பது, ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. ‘SK27’ திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் புதிய மாஸ் அனுபவத்தை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
Listen News!