• Oct 07 2026

மீண்டும் அம்மாவாகப் போகிறாரா? கியாரா அத்வானியின் பதிவால் குஷியில் ரசிகர்கள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி, மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்த ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கியாரா அத்வானி, பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் திரையுலகில் பெரும் கவனத்தை பெற்றது. தொடர்ந்து 2025ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களது மகளுக்கு ‘சராயா’ என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கியாரா அத்வானி யாஷ் நடிப்பில் வெளியான ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், ‘டாக்ஸிக்’ படப்பிடிப்பின் போதே கியாரா கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால் அவர் நடித்த சில காட்சிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாகவும் கூறப்பட்டது. எனினும், தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ள செய்தியை கியாரா வெளியிட்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவுக்கு ரகுல் ப்ரீத் சிங், பூமி பெட்னேகர், நேகா மாலிக், கரண் ஜோஹர் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement