• May 21 2024

நம்ம நடிகை மீரா ஜாஸ்மினா இது..வைரலாகும் புகைப்படங்கள்

tech / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மாதவனின் நடிப்பில் வெளிவந்த ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தொடர்ந்து நடிகர் விஷாலுடன் சண்டைக்கோழி படத்தில் நடித்து பிரபல்யமானார்.தமிழ் சினிமாவின் இவரின் சேட்டையான நடிப்புக்கு ஒரு கூட்டமே உள்ளது.

இவர் தமிழ் சினிமா மட்டுமன்றி மலையாளப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மின் 2014இல் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்பு சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

தற்போது மீண்டும் மலையாள சினிமாவில் என்றி கொடுக்க உள்ளார்.இவ்வாறு படங்களில் கமிட் ஆகி வரும் நடிகை மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகா இருக்கிறார்.இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு என தனியான ரசிகர் கூட்டமே உள்ளது.

அந்தவகையில்,நடிகை மீரா ஜாஸ்மின் வெள்ளை நிற ஷர்ட் அணிந்து கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம மீரா ஜாஸ்மினா இது என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement