• Apr 26 2024

இது உங்கள் முப்பாட்டன் காலம் இல்லை- கமலை மோசமாக விமர்சித்த விக்ரமன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டனர்.

வைல்ட் காட் என்ட்ரியாக மைனா நந்தினி கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்பொழுது வீட்டை விட்டு ஜி.பி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் ஆகியோர் வெளியேறியுள்ளனர். போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.


பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக அரசியல் பிரபலமாக கலந்த கொண்டிருப்பவர் தான் விக்ரமன். இவர் அரசியல் பிரபலங்கள் பலரையும் பேட்டி எடுத்துள்ளார். அதில் பல பேட்டிகளில் பலரை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இருக்கிறார்.

இதனால் இவர் பிக் பாஸில் போட்டியாளர்களை தெறிக்கவிடுவார் என்று பலர் நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு நமுத்து போன பட்டாசாக இருந்து வருகின்றனர். அதிலும் இவரை அசீம் தான் அடிக்கடி அசிங்கப்படுத்திகொண்டே இருக்கிறார்.


இந்த நிலையில் கமல் குறித்து விமர்சித்து விக்ரமன் போட்டு இருக்கும் பழைய பதிவுகள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக Psbb பள்ளி விவகாரத்தில் கமலை விமர்சித்து Psbb மேலும், இன்னொரு பதிவில் ஒரு மூட்டையை போல தூக்கி வருகிறார்கள் என்றால் செல்வி ஜெயலலிதா. சக்கர நாற்காலி என நக்கல் அடிக்கிறார் கமல்ஹாசன். ஒரு எளியவன் நாடாள வந்து விட்டானே எனும் அவர்களின் முப்பாட்டன் காலத்து வன்மம். கமல் அவர்களே இது உங்கள் முப்பாட்டன் காலம் அல்ல திருமா காலம் நீங்கள் நிச்சயம் வருந்துவீர்கள் என்ற பதிவினை விக்ரமன் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement