• May 01 2024

'என்னுடைய முட்டாள்தனமான எண்ணம் இது தான்'- வெளிப்படையாகக் கூறிய மாளவிகா மோகனன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பேட்ட என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இவர் இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியினை ஏற்படுத்தித் தரவில்லை எனலாம்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார்.

அந்தவரிசையில் இப்போது அவர் ரசிகர்களோடு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் ஒரு ரசிகர் “உங்களுக்கு சின்ன வயதில் உங்களுக்கு ஏதாவது முட்டாள்தனமான எண்ணம் இருந்ததா?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதில் கூறிய மாளவிகா “நான் சிறுவயதில் பெரியவர்கள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது நான் குழந்தைப் பருவ காலத்தை மிஸ் செய்கிறேன். திரும்பவும் என் சிறுவயது காலத்துக்கே செல்ல விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement