• Apr 27 2024

பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை செய்து வரும் மகேஷ்பாபுவின் சர்காரு வாரிபட்டா திரைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி வெளியாகிய திரைப்படம் தான் சர்காரு வாரிபட்டா.

இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் டீசர் இணையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இப்படத்தில் மகேஷ்பாபுவின் மகளும் ஓர் பாடலுக்கு நடனமாடி அசத்தியிருப்பார்.

இதனைத் தொடர்ந்து இப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ரிலீஸானது. இந்நிலையில் முதல்நாளில் இதுவரை மகேஷ் பாபு திரைப்படம் வசூலிக்காத அளவுக்கு மிகப்பெரிய தொகையை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் முதல் நாளில் 36.63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு படத்திற்கு ரசிகர்கள் இடையே இருந்து நல்ல விமர்சனங்களும் கிடைத்து வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement