• May 05 2024

இது ஒன்னு அப்பப்போ..பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டு இருக்கு-ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கலாய்த்த ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் தமிழில் முன்னணி நடிகராக விளங்கும் தனுஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

18 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் பிரியப்போவதாக அண்மையில் அறிவித்ததோடு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களை சேர்த்து வைக்க பலரும் முயற்சி செய்தாலும் எதுவுமே சாத்தியமாகவில்லை. கணவரைப் பிரிந்த ஐஸ்வர்யா கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

இது தவிர அடிக்கடி ஜிம்மில் வொர்க்கவுட் செய்து வருவதோடு சைக்கிளிங், ஜாக்கிங், வாக்கிங் என கிடைக்கும் நேரத்தையெல்லாம் பயன்படுத்தி வருகிறார்.இதேபோல் சினிமா பிரபலங்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி காஃபி குடிப்பது முதல் சாமி கும்பிடுவது வரை அனைத்து போட்டோக்களையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதனைப் பார்த்த சிலர் பாராட்டினாலும் லர் தனுஷை வெறுப்பேற்ற இப்படி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறீர்களா என கேட்டு விளாசி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சைக்கிளிங் செய்யும் போட்டோவை ஷேர் செய்துள்ள ஐஸ்வர்யா, தன்னுடைய மகிழ்ச்சியான இடம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏம்மா இப்படி பப்ளிசிட்டி பப்ளிசிட்டின்னு அலையிறீங்க என்று கேட்டு கலாய்த்துள்ளனர்.

இது ஒன்னு அப்பப்பா.. பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டு போ மா போயிட்டு.. ஓரமா விளையாடு… என கமெண்ட் பதிவிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement