• Oct 06 2026

“ஓவர் ஆக்டிங்”னு சொல்லுறாங்க.. என்னுடைய உண்மையான முகம் இதுதான்.! ராஷ்மிகா பகீர்

shali / 56 minutes ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது இயல்பான குணம் குறித்து பேசியுள்ள கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

ராஷ்மிகா எப்போதும் தனது இயல்பான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையால் ரசிகர்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார். குறிப்பாக, அனைவரிடமும் அன்பாகவும் கருணையுடனும் பழகும் அவரது குணம் குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், சிலர் அவரது இந்த அணுகுமுறையை ஓவர் ஆக்டிங் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ராஷ்மிகா, “கருணையோடு இருப்பது என்னுடைய இயல்பான குணம். அதை சிலர் ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும் அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படித் தான் இருப்பேன். அதை யாரிடமும் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

எல்லோரும் எல்லோருக்கும் பிடித்தவர்களாக இருக்க முடியாது. என்னை பிடிக்காதவர்கள் இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொண்டு பொய்யாக நடிக்க நான் விரும்பவில்லை. இதுதான் என்னுடைய உண்மையான முகம்...” என தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த வெளிப்படையான கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement