தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அட்லீ, நடிகர் கமல் ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். பத்தா திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவர் பேசிய இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நிகழ்ச்சியில் பேசிய அட்லீ, கமல் ஹாசன் சார் மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது தனது ஆசை என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, கமல் ஹாசன் பல ஆண்டுகளாக உருவாக்க வேண்டும் என விரும்பி வரும் ‘மருதநாயகம்’ படத்தை தானும் உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதற்காக தன்னிடம் ஒரு சிறிய யோசனையும் இருப்பதாக அட்லீ தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான மற்றும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், தாங்கள் இணையும் படத்தில் ஹீரோ யார், வில்லன் யார் என்பதைவிட கதைக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
“கதையே ஹீரோவாக இருக்கும்” என்ற அட்லீயின் இந்த கருத்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்தால் அது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கூட்டணிகளில் ஒன்றாக அமையும் என்பதால், அட்லீயின் இந்த ஆசை எப்போது நனவாகும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
Listen News!