• May 05 2024

தெறி மாஸாக இருக்கு- முதன்முறையாக லியோ படத்தைப் பார்த்த முக்கிய பிரபலம் போட்ட டுவிட்- அடடே இவரே சொல்லிட்டாரே..

stella / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா , கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ள நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.


சன் டிவி யூடியூப் பக்கத்தில் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியானது. விஜய் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் புக்கிங்கும் விரைவாக நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில் படத்தை பார்த்த ஒரு பிரபலம் லியோ குறித்து டுவிட் போட்டுள்ளார்.இப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் படம் தெறி மாஸாக இருப்பதாக படம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவரது லியோ பட டுவிட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement