• Jun 18 2024

ரத்து செய்யப்பட்ட 'லியோ' இசைவெளியீட்டு விழா... முக்கிய காரணம் ரகுமான் தானா..? அட இதற்குப் பின்னால் இப்படி ஒரு சம்பவமா..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக தயாராகி இருக்கும் திரைப்படம் லியோ. இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மூவியாக அமைந்துள்ளது.


இப்படத்தின் கதாநாயகனாக விஜய் நடிக்க அவருடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் 1மாதம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் லியோ படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றைய தினம் இடி விழுந்தது போல் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதாவது அதிகளவில் பாஸ் கேட்டு அழைப்புகள் வருவதாலும், பாதுகாப்பு கருதியும் லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக கூறப்பட்டது.

மேலும் லியோ டிக்கெட்டுகளை சிலர் போலியாக அச்சடித்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். குறிப்பாக 10 ஆயிரம் போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனாலே உடனடியாக படக்குழு இசை வெளியீட்டு விழாவை கான்சல் பண்ணியது.


அதுமட்டுமல்லாது ரகுமானின் இசை வெளியீட்டு விழாவும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. ஏனெனில் குறித்த இசை வெளியீட்டு விழாவில் அதிகளவில் டிக்கட்டுக்கள் விற்கப்பட்டு பலரும் நெரிசலுக்கு உள்ளானதையும், ஏமாற்றத்திற்கு உள்ளானதையும் எம்மால் எளிதில் மறக்க முடியாது. ஆகவே இப்படி இப்படி ஒரு நிலைமை லியோ இசை வெளியீட்டு விழாவிலும் நடக்கக்கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே லியோ படக்குழுவினர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர்

Advertisement

Advertisement