• May 11 2024

மகாவிற்குத் தெரியவந்த உண்மை... சூர்யா எடுக்கப்போகும் முடிவு..? ஐஸ்வர்யா-கௌதம் திருமணம் நிறுத்தப்படுமா..? பரபரப்பான திருப்பங்களுடன் Aaha Kalyanam..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கச்சி கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்வதால் அவர் அனுபவிக்கின்ற துன்பங்கள், துயரங்கள் என்பவற்றை மையமாகக் கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் ஆஹா கல்யாணம். 


இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஐஸ்வர்யாவின் போனிற்கு கால் வருகின்றது. ஐஸ்வர்யாவின் பாக்கிலிருந்து போனை எடுத்துப் பேசிய மகாவிற்கு ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லை, அத்தனையும் நடிப்பு என்ற விஷயம் தெரிய வருகின்றது.


இதனை கேட்டதும் குழம்பிப் போன மகா "அக்கா கர்ப்பம் இல்லை என்பது தெரிஞ்சுது என்றால் சூர்யா வாழ்க்கை முழுக்க என்கூட பேச மாட்டார்,நான் என்ன பண்ணுவேன்" என யோசிக்கின்றார். 


உடனே மண்டபத்தை நோக்கி ஓடுகின்றார் மகா. அங்கு தாயிடம் உண்மையை சொல்ல முயல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement