• Apr 28 2024

வடிவேலு சேரை நிறுத்த சொல்லிட்டேன், அப்படியொரு மயான அமைதி- எலி படத்தால் பட்ட அவமானத்தை ஓபனாகப் பேசிய இயக்குநர்

stella / 7 months ago

Advertisement

Listen News!

கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடிப்பில் வெளியான போட்டா போட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் யுவராஜ் தயாளன். இவர் வடிவேலுவின் தெனாலிராமன் மற்றும் எலி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். அதிலும் 2015ம் ஆண்டு வெளியான எலி படத்திற்கு பிறகு  8 ஆண்டுகள் கழித்து இறுகப்பற்று படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக மாறியுள்ளார்.

இந்த நிலையில் இவர் எலி படத்தில் நடந்த சம்பவம் குறித்து தற்பொழுது ஓபனாகப் பேசியுள்ளார். அதாவது பிரசாத் ஸ்டுடியோவில் தான் எலி படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் ஒரே மயான அமைதி நிலவியது. வடிவேல் சார் என்னிடம் படம் எப்படி இருக்குன்னு கேளுங்க அப்படின்னு சொன்னார். நான் உங்ககிட்ட வந்து அதே கேள்வியை கேட்ட போது மீண்டும் அதே மயான அமைதியே நிலவியது.


இப்படி ஒரு மயான அமைதி நல்ல தரமான படத்திற்கு கிடைக்கும் அல்லது படம் நல்லா இல்லைனாலும் வரும். எனக்கு புரிஞ்சிடுச்சு இது இரண்டாவது விஷயத்துக்கான அமைதிதான் என்று. அங்கிருந்து வடிவேலு சாருடன் கிளம்பி காரில் சென்று கொண்டிருந்தபோது, காவிரி கார்னரை தாண்டவில்லை காரை நிறுத்துங்க சார் நான் கொஞ்சம் இறங்கி இருக்கிறேன் அப்படின்னு சொன்னேன். 

வடிவேல் சார் காரன் நிறுத்தினார். நான் அப்படியே இறங்கி அங்கிருந்து நடக்க ஆரம்பிச்சுட்டேன். சினிமாவை விட்டு ரொம்ப தூரம் நடந்து போயிட்டேன். அன்னைக்கு நைட்டு அந்த மயான அமைதி என்னை தூங்கவே விடல கொன்னு எடுத்துடுச்சு அதன் பிறகு சுமார் ஒரு வருஷம் இனிமே படமே பண்ண கூடாது என்கிற முடிவில் சினிமாவை விட்டு முற்றிலுமாக ஒதுங்கி விட்டேன். ஆனால், சினிமா என்னை விடவில்லை. எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.


 ஆரம்பத்தில் சும்மா சொல்றாங்க, நம்மள நம்பி இனிமேல் யாரு படம் தருவா, நல்ல படத்த மறுபடியும் கொடுத்து விட வேண்டும் என்கிற நம்பிக்கையில் பல தயாரிப்பு நிறுவனங்களிடம் ஏறி இறங்கி நான் பட்ட அவமானம் எனக்கு அந்த பயத்தை கொடுத்தது. இந்த படம் கிடைச்சும் சுமார் ஒரு வருஷம் அதை நம்பாமல் அந்த படத்துக்கு நான் கதையே எழுதல.. ஆனால் என்னை தொடர்ந்து மோட்டிவேட் பண்ணியதன் விளைவாக தரமான ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் இந்த இறுகப்பற்று படத்தை இயக்கி உள்ளேன்.

இறுகப்பற்று நிச்சயம் உங்களை ஏமாற்றாது. நீங்களும் என்னை ஏமாற்றாமல் ட்ரெய்லரை பார்த்து விட்டு பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்து ஓடவைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ரசிகர்களுக்கு வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement