• May 06 2024

திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலிருந்து புதிய போட்டோவை வெளியிட்ட படக்குழு- யாரெல்லாம் நிற்கிறாங்க தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷின் நடிப்பில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இப்படங்களும் தனுஷின் முன்னைய படங்களைப் போல ஓடிடி தளத்தில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா? என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரும் 18 ஆம் தேதி திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகக் காத்திருக்கின்றது.மித்ரன் ஜஹவர் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், பிரியங்கா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


தங்கமகன் படத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து அனிருத் - தனுஷ் கூட்டணி இந்த படத்தின் மூலம் மீண்டும் கலக்கி வருகிறது. இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷ், அனிருத் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இடம்பிடித்துள்ள போட்டோவை வெளியிட்டுள்ளது படக்குழு.


அந்த போட்டோவுடன்  படத்திற்கான இசை கலவை முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு திருச்சிற்றம்பலம் படத்திற்கான முன்பதிவு விண்டோ ஓபன் ஆகியுள்ளது. படம் வெளியாக இன்னும் சிலநாட்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் புதிய போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement