• May 19 2024

வீடு துடைக்கும் மாஃப் குச்சியில் தேசியக் கொடியை ஏற்றிய நடிகர் சூரி- விளாசி வரும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர்தான் சூரி.இப்படத்தின் மூலம் பரோட்டா சூரி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் இவர் இதுவரை அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பாப்புலர் ஆகியுள்ளார்.

இதுவரை காமெடியனாக நடித்து வந்த இவர் தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதோடு ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் இன்றைய தினம்  நாடு முழுவதும்  75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் வேண்டு கோளுக்கிணங்க பலரும் தமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.


அந்த வகையில், நடிகர் சூரியும் தனது வீட்டில் தேசியக் கொடியை குச்சியில் கட்டி பறக்கவிட்டு அதனருகே நின்று போட்டோ எடுத்து பதிவிட்டார்.சூரியின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஏனெனில், அவர் வீடு துடைக்க பயன்படுத்தப்படும் மாஃப் குச்சியில் தேசிய கொடியை கட்டி பறக்க விட்டுள்ளார். 

அவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலரோ அது மாஃப் குச்சி அல்ல, கடைகளில் தேசியக்கொடியே அவ்வாறு விற்கப்படுகிறது என கூற, அந்த குச்சியின் நுனியில் இருக்கும் பிளாஸ்டிக்கை சுட்டிக்காட்டி இது மாஃப் குச்சி தான் என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Advertisement

Advertisement