லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் முதல் பாடலான " நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் இப்பாடல் பல சர்ச்சைகளிலும் சிக்கியது.மேலும் இப்படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் 14 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்,இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.அதாவது லியோ படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம், 2025-2026 இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்படுகிறது.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விஜய்யின் இத்தனை வருட திரைப்பயணத்தில் 2 பாகமாக வெளியாகும் இது என்றும் கூறப்படுகின்றது.
Listen News!