• Jan 18 2025

திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் அர்ஜுன் மகளுக்கு கண்டிஷன் போட்ட தம்பி ராமையா.. மணவறையில் பரபரப்பு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா மகன் உமாபதி ஆகிய இருவருக்கும் இன்று சிறப்பாக திருமணம் நடந்ததை அடுத்து பல திரை உலக பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விஷால், சமுத்திரகனி, விஜயகுமார் உட்பட பல திரையுலக பிரபலங்கள் வந்திருந்தனர் என்பதும் அர்ஜுன் தனது சொந்த செலவில் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் இந்த திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே தனது மருமகள் ஐஸ்வர்யாவிடம் தம்பி ராமையா ஒரு நிபந்தனை விதித்ததாகவும் இதைக் கேட்டு மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதாவது மணமகன், மணமகள் ஆகிய இருதரப்பினருமே சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும் தனது மருமகள் திருமணத்திற்கு பின்னர் நடிக்க கூடாது என்று தம்பி ராமையா கண்டிஷன் போட்டதாகவும் அந்த கண்டிஷனுக்கு ஐஸ்வர்யாவும் எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மணமகள் ஓகே சொன்னாலும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் தான் இந்த கண்டிஷன் கேட்டு அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே ஐஸ்வர்யா நடித்த ஒரே திரைப்படம் ’பட்டத்து யானை’ என்ற தமிழ் படம் படுதோல்வி அடைந்த நிலையில் அவரை தமிழ் ரசிகர்கள் ஹீரோயினியாக ஏற்று கொள்ளவில்லை. தமிழ் ரசிகர்களால் ஒதுக்கப்பட்ட நாயகி என்ற பெயர் எடுத்த ஐஸ்வர்யா இனி நடித்தாலும் படம் தேறாது என்பது தான் உண்மை என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement