• Sep 21 2023

திடீரென முடிவுக்கு வரும் சுந்தரி சீரியல்- கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்- இது தான் காரணமா?

stella / 1 month ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சி தான் சன் டிவி. இதில் இதுவரை மக்களின் மனதை கவர்ந்த பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.அந்த வரிசையில் தற்போது மெகா தொடராக ஒளிபரப்பாகி வருகிறது சுந்தரி. வித்தியாசமான கதைக்களத்தில் குடும்ப ரசிகர்களின் கவனத்தை சுந்தரி சீரியல் ஈர்த்துள்ளது.

கிராமத்தில் பிறந்த பெண் ஒருவர் தன்னுடைய கனவு படிப்பான IAS படிக்க பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே போராடி, IAS ஆகிறாளா? இல்லையா என்பது பற்றி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.


இயக்குநர் அழகர் இயக்கத்தில், கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கேப்ரியல்லா கதாநாயகியாக நடித்து வருகின்றார்.ஜிஷ்ணு மேனன் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மற்றொரு நாயகியாக ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார்.


மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், மனோகர் கிருஷ்ணா, இந்துமதி மணிகண்டன், சங்கீதா பாலன், ஜோதி, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியல் குறித்து ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் கடும் சோகத்தில் இருக்கின்றனர் என்பதுமு் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement