• Jan 19 2025

ஆட்டோகாரரிடம் சண்டை போட்டாரா நயன்தாரா? குழந்தைகளுக்காக எந்த லெவலுக்கும் செல்வாரோ?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


நடிகை நயன்தாரா ஆட்டோக்காரர் மற்றும் உணவு டெலிவரி செய்ய வந்த டெலிவரி பாய் ஆகியோர்களிடம் சண்டை போட்டதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர் என்பதும் உயிர் மற்றும் உலகு என்ற பெயர்களுடைய இந்த குழந்தைகளை நயன்தாரா கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அப்பார்ட்மென்டில் வசித்து வரும் நயன்தாரா அப்பார்ட்மெண்ட் அருகே உள்ள விளையாட்டு திடலில் அவ்வப்போது குழந்தைகளை அழைத்துச் சென்று விளையாட சொல்லிக் கொடுப்பார். அப்போது அந்த விளையாட்டு திடல் அருகே ஒரு ஆட்டோ வேகமாக வந்ததை அடுத்து அந்த ஆட்டோக்காரரிடம் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தில் இப்படி வேகமாக ஆட்டோ ஓட்டலாமா? என சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் உணவு டெலிவரி செய்ய வந்த டெலிவரி பாய் ஒருவர் சத்தமாக போனில் பேசிக் கொண்டிருக்கும் போது குழந்தைகள் விளையாடும் இடத்தில் இப்படி சத்தமாக பேசக்கூடாது என்று கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

தாய் பாசத்தில் மற்ற எல்லா தாய்மார்களையும் நயன்தாரா மிஞ்சி விடுவார் என்றும் குழந்தைகளுக்கு ஒரு சின்ன தொந்தரவு கூட ஏற்படக்கூடாது என்று பெரும் அக்கறை எடுத்து அவர் வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் போனில் பேசுபவர்களை எல்லாம் கண்டிப்பது என்பது கொஞ்சம் ஓவர் தான் என்றும் இந்த செய்திக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

Advertisement

Advertisement