தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்த சலீம் குமார், ‘தென்காசிப்பட்டணம்’, ‘மரியான்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், தனது நோய் குறித்து வெளிப்படையாக பேசி பலருக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், தேசிய விருது பெற்ற கலைஞருமான சலீம் குமார் காலமானார். அவருக்கு வயது 56. உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிமோனியா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பே அவரது மரணத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கிய சலீம் குமார், பின்னர் மலையாள சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். காமெடி மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் சீரியஸான கதாபாத்திரங்களிலும் தனது திறமையை நிரூபித்தார்.
300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ‘ஆதாமிண்டே மகன் அபு’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றிருந்தார்.
ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரு மகத்தான கலைஞரின் மறைவு, மலையாளம் மட்டுமல்லாது இந்திய திரையுலகிற்கே பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
Listen News!