• May 04 2024

சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்ற பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் திடீரென இறப்புக்குள்ளாவது ரசிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இறப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கேரளா சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் பாரீஸ் சந்திரன். 66 வயதான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து கோழிக்கோடில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சாயில்யம், பம்பாய் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள பாரீஸ் சந்திரன், பயாஸ்கோப் என்ற படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்கு கேரளா அரசின் சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும் இவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement