• May 18 2024

கதை ரஜினிக்கு திருப்த்தி இல்லை..திடீரென மாற்றப்படும் இயக்குநர்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளிவந்தது. 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து லைக்கா தயாரிக்கும் இரு திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இதில் ஒன்று தான் 'லால் சலாம்'. இப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.அத்தோடு  இப்படத்தில் எக்ஸ்டெண்டட் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கிறார்.

இதை தவிர்த்து 'தலைவர் 171' படமும் தயாராகி வருகிறது.மேலும்  இப்படத்தை சிபி சக்ரவத்தி இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது. டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியை வைத்து சிபி இயக்குகிறார் என கூறினர்.


இவ்வாறுஇருக்கையில், ரஜினிகாந்துக்கு இயக்குநர் சிபி கூறிய கதை திருப்த்தி அளிக்கவில்லையாம். இதனால் படத்தின் இயக்குநர் மாற்றப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளது என்கின்றனர். இந்த தகவல் ரஜினியின் ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளது.




Advertisement

Advertisement