• Jun 15 2026

காட்டுக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு.. பலியானது யார் தெரியுமா.? அதிர்ச்சியில் தர்சினி

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  தர்ஷினியை மீட்க ஜனனி சென்ற நேரத்தில் ஆதி வீட்டிற்குள் நுழைந்த இரவணன், தர்ஷினி சிறுமலை ஏரியாவில் தான் இருக்கின்றார். அவரை ஜனனிதான் கடத்திச் சென்றிருக்கின்றார் என்று ஜனனியை பற்றி கூறி ஷாக் கொடுக்கின்றார்.. மேலும் தர்ஷினியை மீட்டு வருகின்றேன் என்று ஆதி குணசேகரன் கிளம்ப, நான் அவர்களை கொண்டு வருகின்றேன் என்று ராவணன் அவரை தடுத்து கிளம்புகின்றார்.

அத்துடன் ஜனனியுடன் இருப்பவர் ஒரு பயங்கரவாதி என்றும் நாம் போல பண்ணுவது தெரிந்தால் தர்ஷினிக்கு உயிருக்கே ஆபத்து என்றும் குணசேகரனை தடுத்து நிறுத்திய ராவணன், வெளியில் வந்ததும் தன்னுடைய ஆட்களுக்கு போன் போட்டு தர்ஷினியுடன் இருக்கும் சுவாமிநாதனை சுட்டுக் கொல்லுமாறு கூறுகின்றார்.

இன்னொரு பக்கம் அங்கு ஒளிந்திருந்த தர்ஷினி இராவணனின் அடியாட்களை அடிக்கின்றார். இதற்கிடையில் துப்பாக்கி சத்தம் கேட்கின்றது. அந்த நேரத்தில் அருந்ததி என வந்து ராவணனின் அடி ஆள்களில் ஒருவரின் காலில் சுடுகின்றார். பின்பு அங்கிருந்து தர்ஷினியை மீட்டு செல்கின்றனர்.


இதைத்தொடர்ந்து ராவணன் போன் போட்டு முடிச்சிட்டியா என்று கேட்க, அங்கிருந்த ஆள் அவங்க எங்கள அடிச்சு போட்டு எஸ்கேப் ஆயிட்டாங்க என்று கூறுகின்றார். இதனால் வேறு ஒரு டீமை இறக்க தயாராகின்றார் ராவணன். அவர்களும் காட்டுக்குள் தேடச் சொல்லுகின்றனர்.

இதன்போது தர்ஷினி, சுவாமிநாதன் இருவரும் காயங்களுடன் இருப்பதால் வேகமாக செல்ல முடியவில்லை. இதன் போது இராவணன் அனுப்பிய புது டீம் அவர்களை பார்த்து விடுகின்றனர். அவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடைபெறுகின்றது. 

அதில் சுவாமிநாதன் மீது குண்டு பாய்கின்றது. இதை பார்த்து ஜனனி பதறுகின்றார். தர்ஷினியின் கண்முன்னே சுவாமிநாதனும் இறந்து போகின்றார். பின்பு அருந்ததி தன்னுடைய பங்கிற்கு துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து எஸ்கேப் ஆகின்றனர். இதை அடுத்து ஜனனியை அந்த அடியாட்கள் துரத்திச் செல்கின்றனர். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement