• Jun 07 2026

குழந்தைக்கு தந்தை இவர் தான்!- DNA சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!

shali / 2 months ago

Advertisement

Listen News!

சமையல் தொழிலதிபராகவும், தொலைக்காட்சி நடுவராகவும் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். தனது சமையல் திறமை மற்றும் நகைச்சுவையான பேச்சு மூலம் அவர் மக்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து, பின்னர் குழந்தையுடன் ஏமாற்றியதாக குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில காலமாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.


இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக, குழந்தைக்கான மரபணு (DNA) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பதைக் காட்டும் வகையில் முடிவு உறுதியாகியுள்ளது என நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வெளியாகியவுடன் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. சிலர் இந்த முடிவை வரவேற்க, மற்றவர்கள் இந்த விவகாரத்தைப் பற்றி கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு, நீண்ட நாட்களாக நிலவி வந்த இந்த வழக்கில் ஒரு முக்கியமான தீர்வு கிடைத்துள்ளதால், இது தற்போது பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement