• May 05 2024

பாலியல் தொல்லை செய்யும் காமக் கொடூரன் பிக்பாஸ் போட்டியாளரா..? விளாசித் தள்ளும் பிரபல நடிகை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 ஆரம்பமான நிலையில், ஹிந்தியிலும் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஹிந்தி சீசன் 16 ஆரம்பமாகி உள்ளது.

அதில் போட்டியாளராக அறிமுகமாகி உள்ள பாலிவுட் இயக்குநர் சஜித் கானுக்கு எதிராக பாலிவுட் நடிகை ஷெரின் கான் உள்ளிட்ட பலர் கொந்தளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதாவது 2006-ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த 'தர்ணா ஜரூர் ஹை' என்ற படத்தின் மூலம் பாலிவுட் இயக்குநராக அறிமுகமானவர் தான் சஜித் கான். அதுமட்டுமல்லாது இந்தியளவில் புகழ்பெற்ற ஹவுஸ்ஃபுல் படத்தின் 1,2 மற்றும் 4ஆவது பாகத்தை இயக்கியவர்.

அதுமட்டுமல்லாது நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் இவர் மீது எழுப்பப்பட்டது. அதாவது மீடூவில் இவர் பெயர் பெரிதளவில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ராவும் இவருக்கெதிராக கருத்து வெளியிட்டிருக்கின்றார். அதாவது ஷெர்லின் சோப்ரா 'காமசூத்ரா 3டி' படத்தில் நடித்திருந்தார்.

மேலும், பல எரோட்டிக்கா படங்களிலும், அதனோடு இணைந்து வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இவரும் இயக்குநர் சஜித் கான் தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தினார் என மீடூ சர்ச்சை வெடித்த நிலையில், வெளிப்படையாக தானும் பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் தொடர்ந்து இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சஜித் கானுக்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார்.


அதாவது "இயக்குநர் சஜித் கான் தனது ஆண்குறியை காட்டி 0 முதல் 10 வரை ரேட்டிங் கொடுக்க சொல்லி பாலியல் தொல்லை கொடுத்தார். நானும் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போய், அவருக்கு ரேட்டிங் கொடுக்க காத்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது "அதுமட்டுமல்லாது இப்படியான ஒரு காமக் கொடூரன் எப்படி பிக்பாஸ் போட்டியாளராக மக்கள் பார்க்கும் ஒரு பிரபல ஷோவில் இடம் பெறலாம்?" என சல்மான் கானையும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் ட்விட்டர் பதிவின் வாயிலாக விளாசி உள்ளார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா.

Advertisement

Advertisement

Advertisement