• May 18 2024

பிக்பாஸ் அந்த போட்டியாளரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்- மகளிர் ஆணையம் கோரிக்கை!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்பட பிரபலத்தை பிக்பாஸில்  இருந்து வெளியேற்ற உத்தரவிடுமாறு, மத்திய அமைச்சருக்கு மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.மேலும்  அதில், இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16ஆவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பமாகியது.

மேலும் இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பிரபல இந்தி இயக்குநர் சஜித் கானும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். MeeToo இயக்கத்தின்போது, பல்வேறு பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.



இவ்வாறுஇருக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என டெல்லி பெண்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும்  இதுகுறித்து, மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தையும், பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மல்லிவால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவில்,"MeToo இயக்கத்தின்போது, 10 பெண்கள் தங்களுக்கு சஜித் கான் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்தனர். அந்த புகார்களும், சஜித் கானின் அருவறுக்கத்தக்க மனநிலையைதான் காட்டுகிறது.அப்படிப்பட்டவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார், இது மிகவும் தவறானது." என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த கடிதம்....







Advertisement

Advertisement