கடந்த 2019ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் படப்பிடிப்பானது . திண்டுக்கல் சிறுமலை, சென்னை, கோடைக்கான என படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து பலமுறை இடைவெளி விடப்பட்டது. கால்ஷீட் பிரச்சனை தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ரைடு உள்ளிட்ட பல காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போனது.
சமீபத்தில் கொடைக்கானலில் சூட்டிங் நடத்துவதற்காக சென்ற டீம் அங்கிருந்த சிறுமலைக்கு புறப்பட்டனர். ஆனால் அங்கும் இதன் இறுதி கட்டப் படப்பிடிப்பு எடுக்கப்படவில்லை தற்போது சென்னை திரும்பி உள்ளனர்.இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வெற்றிமாறனின் படங்கள் பல ஆண்டுகள் படமாக்கப்படுவதால் தயாரிப்பாளர்கள் நொந்து போய் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது விடுதலை படத்திற்கும் இந்த நிலை ஏற்பட்டிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.
அத்தோடு அவரது படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. விடுதலை படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மெண்ட் தயாரித்து வருகிறது.இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க படத்தின் வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!