• May 03 2024

"உனக்கு கண்ணாடிக்காரன் தான் வேணுமா?- வி.ஜே கதிரவனை ரூட்டு விடும் ஆயிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 9ம் திகதி மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகிய நாளிலிருந்து சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது.பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டி ஒளிபரப்பாகி வருகின்றது.

 பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த சீஸனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் 20 போட்டியாளர்கள் மட்டும் கலநது கொண்ட நிலையில் தற்பொழுது வைல்ட்காட் என்ட்ரியாக மைனா நந்தினி சென்றுள்ளார்.


பல்வேறு விதமான சுவாரஸியமான நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் வீட்டுக்குள் எப்போதும் கண்ணாடியுடனேயே வலம்வரும் கதிரவன், கண்ணாடி அணியாமல் கிச்சனுக்குள் நுழைகிறார்.அங்கே இருந்த ஆயிஷா மற்றும் வெங்கட் ஆகியோர் கதிரவனை பார்க்கின்றனர். 


அப்போது ஆயிஷா கதிரவனை பார்த்து,"இன்னிக்கு ரொம்ப சீரியஸா தெரியுறாரு" எனச் சொல்ல, "கண்ணாடி போடல அதான்" என்கிறார் கதிரவன். இதனையடுத்து ஆயிஷா,"செட் ஆகல, எனக்கு இந்த கேரக்டர் பிடிக்கல" என சிரித்துக்கொண்டே சொல்கிறார். பதிலுக்கு புன்னகைத்தபடி "உனக்கு கண்ணாடிக்காரன் தான் வேணுமா?" என கதிரவன் கேட்க ஆமாம் என்கிறார் ஆயிஷா. அதைத் தொடர்ந்து, சாப்பிட செல்லும் கதிரவன், ஆயிஷாவை பார்த்து "சாப்பிட்டியா?" எனக் கேட்டுவிட்டு செல்கிறார்.இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement