• May 13 2024

மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற பிக்பாஸ் நமிதா மாரிமுத்து- வாஃவ் குவிந்து வரும் பாராட்டுக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாகவும் ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 6வது சீசன் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த வாரத் தலைவராக ஜி.பி முத்து தேர்வாகியுள்ளார். வைல்ட் காட் என்ட்ரியா மைனா நந்தினி நுழைந்துள்ளார். இதனால் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.


இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் நமிதா மாரிமுத்து. திருநங்கையான இவர் மாடர்லிங் துறையிலும் அதிக ஆர்வம் உடையவர் . இவர் இந்த நிகழ்ச்சியில் தனது வாழ்வில் சந்தித்த பல துன்பங்களைக் கூறி ரசிகர்களைக் கவர்ந்தார்.

நீண்ட நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பார் என்று கருதப்பட்ட நிலையில் உடல் நிலை சரி இல்லாததால் திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் ஆக்வோக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது இவர் மிஸ் இந்தியா பட்டத்தை பெற்றுள்ளார்.இது குறித்த புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement

Advertisement