தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடுகின்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர் தான் AR ரகுமான். இவர் 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தற்போது இந்திய சினிமாவையும் தாண்டி உலகளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவரைப் பற்றி பல சுவாரஸ்யமான செய்திகள் வெளியாகும்.
ஆனால் கடந்த வருஷம் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக AR ரகுமான் வெளியிட்ட தகவல் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில், AR ரகுமான் உருக்கமாக பேசிய பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.
அதில், நான் சின்ன வயசுல இருக்கும்பொழுது என்னுடைய அப்பா மறைந்துவிட்டார். அப்புறம் என்ன பார்த்துக்கிட்ட என்னோட பாட்டியும் மறைச்சுட்டாங்க.. நான் ஆசைப்பட்டு ஆசையா வளர்த்த நாய்க்குட்டியும் மறைஞ்சிடுச்சு .
நான் நேசித்த எதுவும் இப்போ என்கிட்ட இல்ல.. என்னோட மனைவியும் இப்போ என்கூட இல்லை.. என்னோட வாழ்க்கையில் எதுவும் நிலையானது இல்லை.. சின்ன வயசிலேயே நான் இதை புரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
Listen News!