• May 01 2024

இந்த வாரம் வெளியேற்றப் பட்டியலுக்கு தேர்வானோர் இவர்களா... ஷாக்கான ரசிகர்கள்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6ஆனது தற்போது என்றுமே இல்லாத அளவிற்கு களை கட்டி வருகின்றது. அத்தோடு இந்நிகழ்ச்சியானது தற்போது சண்டை, சச்சரவிற்கு பஞ்சமில்லாமல் த்ரில்லிங்காகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே இடம்பெறுகின்ற சலசலப்புக்களும், முகச்சுளிப்புக்களும் தான்.

21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறிய வண்ணமே இருக்கின்றார்கள். அந்தவகையில் நேற்றைய தினம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கின்றார். 


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் எவிக்சனுக்கு 2நபர்களைத் தேர்வு செய்யுமாறு கூறப்படுகின்றது. அந்தவகையில் விக்ரமன், மணிகண்டன் ஆகியோர் குயின்ஷியையும், ரச்சிதாவையும் கூறுகின்றனர். அதேபோல் தனலட்சுமி குயின்ஷி, கதிரைக் கூறுகின்றார். கதிரவன் ஜனனியைக் கூறுகின்றார்.

அந்தவகையில் இந்தப் ப்ரோமோவின் படி கதிரவன், குயின்ஷி, ரச்சிதா, மைனா, ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள். 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement