• Apr 25 2024

எனக்கு அவங்க தாய் மாதிரி நடிக்கவே தெரியாது- லட்சுமி ராமகிருஷ்ணன் மீது பாசத்தில் பொங்கி வழியும் இயக்குநர் மிஷ்கின்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் மிஷ்கின். இவர் இதனைத் தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி உள்ளார்.

தற்போது பிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் முதன்மை கதாபத்திரத்தில் ஆண்ட்ரியாவும், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.இது தவிர பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தும் வருகின்றார்.


இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்டு பேசினார். இவருடன் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவரது கணவருடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அந்த சமயத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் அவரது கணவர் ராம் குறித்து பேசிய மிஷ்கின், "ரொம்ப நேசித்த நபர்கள் இரண்டு பேரும். என் சினிமாவில் எனக்கு ஒரு தாய் மாதிரி, ஒரு சகோதரி மாதிரி எப்பொழுதுமே என் கூடவே இருந்துட்டு இருக்காங்க. இன்னிக்கு யாரு வர்றாங்கன்னு கேட்டேன், லட்சுமின்னு சொன்னதும் 'போதும் எனக்கு' அப்படின்னு சொன்னேன். நாங்க சினிமா பண்ணும் போது எங்க கூட ஒரு தாயும் மகனும், ஒரு அக்காவும் தம்பியும், அண்ணனும் தங்கச்சியும் போல ஒரு உறவு மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்.

எனது வாழ்க்கை ஃபுல்லா, நான் இறக்கும் போது எனது மகளை நினைப்பேன். இந்த அம்மாவை (லட்சுமி ராமகிருஷ்ணன்) நினைப்பேன், ராமையும் நினைப்பேன். அவர் ஒரு அற்புதமான Human Being. ஒரு டீசண்டான நடிகை" என லட்சுமி ராமகிருஷ்ணனை குறிப்பிட்டு, அதற்கு 60 மார்க் போடும் மிஷ்கின், அற்புதமான இயக்குநர் என்றும் அவரை பாராட்டுகிறார்.


தொடர்ந்து பேசும் மிஷ்கின், லட்சுமி ராமகிருஷ்ணன் கணவர் ராம் குறித்து பேசும் பேசுகையில், "என் படத்துல நடிச்சிருக்காரு. நடிக்கவே தெரியாது ஆனா என் படத்துல சூப்பரா நடிச்சிருக்காரு. இப்போ யோசிச்சிட்டு இருக்காரு, அடுத்த படத்துல போடணும்னு சொல்லிட்டு. ஒரு சிறந்த மனம் கொண்ட மனிதர்கள். இவர்கள் இங்கு இருப்பது பெருமையாக உள்ளது" என பெருந்தன்மையுடன் மிஷ்கின் தெரிவித்தார்.







Advertisement

Advertisement

Advertisement