• Jul 04 2026

26 வருஷம் கழிச்சும் ரஜினியால் கல்லா கட்டிய தயாரிப்பாளர்.. -கோடிக்கணக்கில் லாபமா?

shali / 2 months ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மறைந்த நடிகை சவுந்தர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த, கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய 'படையப்பா' திரைப்படம் 1999-ல் வெளியாகி தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக வரலாறு படைத்தது. ரஜினிகாந்தின் நடிப்பு, இசை மற்றும் கதைக்களம் ஆகியவை இணைந்து இப்படத்தை ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்தன.


சமீபத்தில், ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு 'படையப்பா' திரைப்படம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 

பழைய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் வெளியான இந்த படம், ரசிகர்களிடையே மீண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகள் முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டம் காணப்பட்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்த ரஜினிகாந்த், தனது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் 5 சவரன் தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. ரஜினியின் இந்த அன்பான செயல், அவரின் எளிமை மற்றும் நன்றியுணர்வை மீண்டும் வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கூறுகின்றனர். 

Advertisement

Advertisement