நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த “சாதி, மதமற்றவர்” சான்றிதழ் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான கருத்தை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்துள்ளது. இந்த வழக்கில், ஒருவர் தன்னை சாதி மற்றும் மத அடையாளங்களிலிருந்து விடுபட்டவர் என அறிவிக்கும் சான்றிதழ் பெற வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், “சாதி, மதமற்றவர் என்பதை சான்றிதழ் மூலம் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அது ஒரு நிர்வாக ஆவணம் அல்ல, வாழ்க்கை முறை மற்றும் தனிநபர் நம்பிக்கை சார்ந்தது” என்று கருத்து தெரிவித்தது. மேலும், “ஒருவர் தனது நடத்தை, செயல்கள் மற்றும் சமூக அணுகுமுறையின் மூலம் தான் சாதி, மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை காட்ட வேண்டும்” எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
சுய பிரகடனம் அல்லது அரசாங்க சான்றிதழ் அவசியமில்லை என்றும், இது சட்ட ரீதியான ஆவணமாக மாற்றக்கூடிய விஷயம் அல்ல என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து நடிகர் பார்த்திபனின் மனுவை முடித்து வைத்தது.
இந்த தீர்ப்பு சமூகத்தில் சாதி, மத அடையாளங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. பலரும் இதை ஒரு முக்கியமான கருத்து வழிகாட்டியாக பார்க்கின்றனர். தனிநபர் சுதந்திரம் மற்றும் சமூக ஒற்றுமை குறித்து இந்த தீர்ப்பு புதிய பார்வையை வழங்குகிறது எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.
Listen News!