• Apr 26 2024

சிவகார்த்திகேயனின் மாவீரன்' திரைப்படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்-இவர் புஷ்பா படத்தில் வந்தவராச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!


"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வசூல் மன்னனாக வலம் வந்தவர் தான் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் இறுதியாக பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியிருந்து. இந்தப்படம் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை என்பதும் முக்கியமாகும்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'மண்டேலா' பட இயக்குநர் மடோன் அஸ்வினுடன் இணைந்து 'மாவீரன்' என்ற படத்தில் நடித்து வருகின்றார்.  இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.


'மாவீரன்' திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது.


இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. சுனில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement