• Feb 23 2025

ஸ்ருதியின் முகத்திரையை சுக்குநூறாக உடைத்த முத்து? புது தாலியை கழட்ட துணிந்த மீனா? வாயடைத்த விஜயா? சூடுபிடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

அதன்படி, மூச்சு திணறல் ஏற்பட்ட அண்ணாமலையை ஹாஸ்பிடலுக்கு மீனா ஆட்டோவில் அழைத்துச் செல்ல, போகும்  வழியில் முத்துவுக்கு போன் பண்ணி மாமாவா ஹாஸ்பிடலுக்கு கொண்டு போற விஷயத்தை சொல்கிறார்.

இதை கேட்டு பதறி அடித்து ஹாஸ்பிடலுக்கு சென்ற முத்து, டாக்டர் அப்பாவுக்கு என்ன ஆச்சு என கேட்க, சரியான டைம்முக்கு அண்ணாமலையை கொண்டு வந்ததால் அவரைக் காப்பாற்றி விட்டதாக டாக்டர் சொல்லுகிறார்.


இதைத்தொடர்ந்து அண்ணாமலைக்கு பில் பே பண்ண செல்லும்போது, முத்து பணத்திற்கு யோசிக்க, மீனா தனது தாலியை அடகு வைக்குமாறு சொல்கிறார். எனினும் வாங்கி ஒரு நாள் கூட ஆகல என முத்து மறுக்கிறார்.

இதை தொடர்ந்து அண்ணாமலையை வீட்டுக்கு கொண்டு வர, அங்கு வந்த ஸ்ருதி, ஒரு நாளே டிஸ்டார்ஜ் பண்ணிட்டாங்களா? அப்ப சின்ன விஷயம் தான் என சிம்பிளாக சொல்கிறார்.

இதை கேட்டு கோபப்பட்ட முத்து, அப்ப நீ என்னத்துக்கு பிளான் பண்ணினா? இதைவிட ஏதாவது பெருசா நடக்குமா என்று ஸ்ருதியை விளாசித்  தள்ளுகிறார். 

இதுதான் தற்போது வெளியாகிய ப்ரோமோ. இனி என்ன என்ன நடக்குமென என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement