• Apr 28 2026

அழகூரில் பூத்தவளே..! ரசிகர்களை மெய்மறக்க செய்த சீரியல் நடிகை.! வைரலாகும் க்யூட் போட்டோஸ்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை கோமதி பிரியா. இந்த சீரியல் மூலம் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழ் கிடைத்தது.

இந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளிலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் என்ற சீரியலில் கோமதி பிரியா நடித்திருந்தாலும், அவருக்கு பிரபலத்தை தேடிக் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான்.

தற்போது தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் சீரியல்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் கோமதி பிரியா. மேலும் தமிழில் ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியலின் மலையாள மறுபடைப்பிலும் நடித்து வருகிறார்.


இவர் ஆரம்பத்தில் பல வாய்ப்புகள் தேடி பல தேர்வுகளில் கலந்துகொண்டதாகவும், ஆனால் தனக்கு நிறைய நிராகரிப்புகள் வந்ததாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 

ஆனால் தற்போது அவருடைய விடாமுயற்சியால் சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே காணப்படுகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கும் கோமதி பிரியா, தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அடிக்கடி பகிர்வார்.  அவர் வெளியிடும் பதிவுகளுக்கு லைக்குகள் குவியும்.

இந்த நிலையில், சிவப்பு நிற ஆடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் அவர் அழகிய சுருள் முடியும் எளிமையான அலங்காரமும் செய்துகொண்டு காட்சியளிக்கிறார். இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகின்றது.

Advertisement

Advertisement