• May 07 2024

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முக்கிய நபர்கள்...திணறும் போட்டியாளர்கள்...வெளியானது சூப்பர் ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது பைனலை நெருங்கி வருகிறது. தற்போது 90 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்றதன் காரணமாக அமுதவாணன் முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் முக்கிய போட்டியாளரான ரச்சிதா எலிமினேட் செய்யப்பட்டதால் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதாவது முதலில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சிறப்பிப்பார்கள் என்று கூறிய நிலையில் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மற்றும் ஒரு நபர் வந்துள்ளனர்.

அதில் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு பொருளைக் கொடுத்து இவ்வளவு காலம் அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி தெளிவாக சொல்லி கலாய்த்துள்ளனர்.இவ்வாறாக  இன்றைய ப்ரமோ சூப்பராக வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement