• Feb 05 2026

ராஜாக்கள் வளர்கின்றார்கள்.. ஜாயின் அடுத்த அட்டாக்.. ரங்கராஜுக்கு ஆப்பு கன்பார்ம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்த சில நாட்களில், அவருக்கு  ஆண் குழந்தை பிறந்தது.  இதனால் சரி இறங்கி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  அதற்கு எதிராக, அந்த குழந்தைக்கு தான் அப்பா என்பதை நிரூபிக்குமாறு கோரிக்கை வைத்தார் ரங்கராஜ்.

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் என்ற படத்தின் இயக்குநரின்  மனைவி தான் ஜாய் கிரிஸில்டா. அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனாலும் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். 

அதற்குப் பிறகுதான் ஜாய் கிரிஸில்டா ரங்கராஜ் உடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அது ஒரு கட்டத்தில் காதலாக மாறி  அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணமும் செய்து கொண்டுள்ளனர். அதன்பின் ஜாய் கர்ப்பமாக இருப்பதை அறிந்த  மாதம்பட்டி ரங்கராஜ் அவரிடமிருந்து விலக ஆரம்பித்தார். 


ரங்கராஜுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி  அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதற்குப் பிறகு ரங்கராஜ் தன்னுடன்  நெருக்கமாக இருந்த புகைப்படங்களை  வெளியிட்டு மாதம்பட்டியை  பங்கம் பண்ணி வருகின்றார் ஜாய் கிரிஸில்டா. 

ஒரு கட்டத்தில்  ஜாயுடன் இடம்பெற்ற  திருமணம்  கட்டாயத்தினால்  இடம்பெற்றதாகவும், ஜாய்க்கு  பணம்தான்  நோக்கம் என்றும்  குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருந்தார் ரங்கராஜ்.  ஆனாலும்  குழந்தை தொடர்பான டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு அவர் இன்னும் செல்லவில்லை. 

இந்த நிலையில்,  தற்போது பிறந்த மகனை  முதல் கணவனுக்கு பிறந்த மகன்  கொஞ்சுவதை  புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டா  பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் ஜாய் கிரிஸில்டா. 

மேலும் அவருடைய பதிவில், ராஜாக்கள் வளர்கின்றார்கள்.. நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு தைரியமான முடிவுக்கு பின்னாலும் நீங்கள் தான் இருக்கின்றீர்கள்.. என்னுடைய முதல் லிட்டில் ஹீரோ  அவனுடைய சகோதரனை பாதுகாக்கின்றான் என்று எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement