• May 10 2024

மாமன்னன் மைனஸ் வடிவேலு தான் - என்ன இப்படி சொல்லிட்டீங்க..! விளாசி தள்ளிய பயில்வான் ரங்கநாதன்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

ஒரு சில பஞ்சாயத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. படம் தோல்வியை சந்தித்ததைவிட வடிவேலுவின் காமெடியில் புதிய விஷயங்கள் எதுவுமே இல்லை என்ற பேச்சே அதிகம் எழுந்தது. இந்தச் சூழலில் மாமன்னன் படத்தில் கமிட்டானார் வடிவேலு.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் மாமன்னனில் வடிவேலுவுக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம். சொல்லப்போனால் மாமன்னனே வடிவேலுதான் என்கிறார்கள் படக்குழுவினர். மாரி செல்வராஜும் ஒவ்வொரு பேட்டியிலும் வடிவேலுவை இதில் மாற்றி காட்டியிருக்கிறேன் என்று கூறியும் வருகிறார். இதனால் மாமன்னன் படம் வடிவேலுவுக்கு தரமான கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாமன்னனில் நடித்ததோடு மட்டுமில்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடவும் செய்திருக்கிறார் வடிவேலு. அந்தப் பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. சில நாள்களுக்கு முன்பு நடந்த மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் வடிவேலு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜாலியாக பேசுகிறேன் என்கிற பெயரில் அலட்சியாமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 

இந்நிலையில் மாமன்னன் படத்துக்கு வடிவேலுதான் மைனஸ் என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய அவர், "வடிவேலுவின் கதை முடியும் நேரம் வந்துவிட்டது. அவர் தன்னை  சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அவரது காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால்தான் அவரை மாமன்னன் படத்தில் மாற்றிக்காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். வடிவேலு மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. சந்திரமுகி 2வில் பி.வாசுவை ஒரு வழி ஆக்கிவிட்டார் வடிவேலு. அதேபோல் மாமன்னன் படத்துக்கு பெரிய மைனஸ் வடிவேலுதான்" என்றார்.

வடிவேலு மீது சமீபகாலமாக பலரும் குற்றச்சாட்டுக்களை கடுமையாக முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக வடிவேலு மற்றவர்களின் வாய்ப்பை தட்டி பறித்தவர், மற்றவரை வளரவே விடமாட்டார், உதவி செய்யவும் மாட்டார் அப்படி செய்தாலும் அதை பெரிதாக சொல்லிக்காட்டுவார் என அந்தப் பட்டியல் நீள்கிறது. இப்படி வடிவேலு மீது வாசிக்கப்படும் தொடர் புகார் பத்திரங்கள் அவர் மீதான பிம்பத்தை சிறிது சிறிதாக ரசிகர்களிடையே உடைத்துவருகிறது என்பது நிதர்சனம்.

Advertisement

Advertisement

Advertisement