• May 07 2024

காத்திருத்த ரசிகரை கலாய்த்த நடிகை... செல்ஃபி கேட்ட ரசிகருக்கு சமந்தா செய்த சம்பவம்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. இவர்  சமீபத்தில் விஜய்தேவர் கொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தந்து ரசிகர் ஒருவரை சந்தித்த போது அவர் நடந்து கொண்ட விதம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவல்தளத்தில் பரவி வருகிறது. 


நடிகை சமந்தா தனது நடிப்பினால் பல்லாயிரம் கணக்கான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். சில கிசு கிசு சம்பவங்களில் ட்ரோல் செய்யப்பட்டாலும் தனது வேலையை சரியாக செய்து வருகிறார். சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தற்போது தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டிருந்தார்.


இந்நிலையில் இவர் மும்பை ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு சென்று வெளியில் வரும் போது நடிகை சமந்தாவுக்காக காத்திருந்த ரசிகர் ஒருவர் இன்று எனக்கு பிறந்தநாள் உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டு உள்ளார். அதற்கு நடிகை சமந்தா உனக்கு எதனாலும் பிறந்தநாள என தனது ரசிகரை கலாய்த்து விட்டு அவருடன் புகைப்பட எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement