• May 05 2024

"தி காட்பாதர்" படத்தில் நடித்த முக்கிய நடிகர் மரணம்- அறிவிப்பை வெளியிட்ட அவரது குடும்பத்தினர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாவது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் தற்பொழுது அமெரிக்க நடிகர் ஒருவர் இறந்த செய்தியானது ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மாஃபியா திரைப்படமான "தி காட்பாதர்" படத்தில் கேங்ஸ்டர் சோனி கார்லியோனாக நடித்தவர் தான் அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் கான். இப்படத்தில் சிறப்பாக நடித்து ஆஸ்கர் விருது, கோல்டன் குளோபல் விருது, எம்மி விருது என அந்த படத்திற்காக மட்டும் பல விருதுகளை பெற்றார்.

ஜேம்ஸ் கானின் திரைப்பயணம் ஆறு தசாப்தங்களாக நீடித்துள்ளது. உளவியல் த்ரில்லர் படமான "மிசரி" முதல் நகைச்சுவை படதான "எல்ஃப்" வரை திரைப்படங்களில் மிகவும் ரசிக்கும் படி நடித்திருப்பார் ஜேம்ஸ். கடந்த ஆண்டு, அவர் எலன் பர்ஸ்டினுக்கு ஜோடியாக "குயின் பீஸ்" என்ற காதல் நகைச்சுவை படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஜேம்ஸ் கானின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நடிகர் ஜேம்ஸ் கான் நேற்று மாலை இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement