• May 18 2024

வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாடில் இருந்து வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்- யாரெல்லாம் நிற்கிறாங்க என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராகவும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தனது தந்தையின் பிறந்தநாளுக்குச் செல்லாத காரணத்தால் சமூக வலைத்தளவாசிகளால் பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார். இருப்பினும் விமர்சிப்பவர்களை விஜய் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய நட்சத்திர பட்டாளமே ஒன்றாக நடித்து வரும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாடில் இருந்து றீசண்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கதாநாயகி ராஷ்மிகா மற்றும் சங்கீதா இருவரும் செல்பி எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படம் குடும்ப திரைப்படமாக உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அத்தோடு இப்படத்தில் சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement