• May 05 2024

கையில் குழந்தையுடன் திடீரென மேடையில் ஏறிய விக்ரம்... வெடி வெடித்து ஆர்ப்பாட்டம் செய்த ரசிகர்கள்... அது யாருடைய குழந்தை தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலத்திற்கு காலம் பல படங்களும் உருவாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்திலும், விக்ரம் நடிப்பிலும் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'கோப்ரா'. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். 


அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படமானது ஆகஸ்ட் மாதம் 31-ஆம் திகதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகள் தற்போது இந்தியா முழுதும் நடைபெற்று வருகிறது. இதற்காக இப்படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் பலரும் ஒவ்வொரு ஊர்களுக்கும் பயணித்து வருகிறார்கள். 

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மியா ஜார்ஜ் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட மியா ஜார்ஜ் கோப்ரா படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் பேசும் போது, 2020-ஆம் ஆண்டு, தான் சிங்கிளாக இருக்கும் பொழுது இந்த படத்தை கமிட் செய்ததாககவும், அதன்பின் இப்படத்தில் நடித்த நேரத்தில் தனக்கு திருமணம் ஆனது என்றும், தற்போது 2022ஆம் ஆண்டு தனது மகனுடன் படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்திருப்பதாகவும் செம ஜாலியாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து மியா ஜார்ஜ் மகனை தூக்கிக்கொண்டு நடிகர் விக்ரம் மேடை ஏறும் பொழுது அங்கிருந்து தீடீரென வெடியை வெடித்துள்ளனர். இதை பார்த்த விக்ரமின் ரசிகர்கள்"நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கவனமாக இதுபோன்ற விஷயங்களை கையாள வேண்டும்" என்று கூறி வருகிறார்கள். 


நடிகர் விக்ரம் மேடை ஏறிய பின்னர் மியா ஜார்ஜின் மகனைப் பார்த்து 'கோப்ரா பேபி' என்று செல்லமாக அழைத்தார். இந்த க்யூட்டான வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement